Saturday, December 13, 2008

நூற்றாண்டு வாழியவே

இன்சுவைத் தமிழ் சொல் பூட்டீ
இனித்திடும் இசையும் கூட்டி
எம்தலைவன் உன்னைப்பாடி
எடுத்துவரக் கவிகள் கோடி

சின்னவன் உன்னைப் பாட
சிறந்த தமிழ் வார்த்தை தேட – அது
அன்னியமாய் மறைந்த ஓட
அழுகிறது உணர்வு வாட

தண்மதியாய் உதித்த - ஈழத்
தாயவளின் தலைமகனே – எம்
கண்மணியே வாழ்கவென
கசிந்துருகி வாழ்த்துகின்றோம் - உன்

எண்நிறைந்த திட்டமெலாம்
எழுச்சி கண்டு விடிந்து வரும்
நுண் அறிவின் மேதகையே
நூற்றாண்டு வாழ்வாயய்யா

ஆண்டொன்றில் திருவாய் திறப்பாய்
அவனியையே நோக்க வைப்பாய்
மீண்டு வரும் தேசமென
மிடுக்குடனே எடுத்துரைப்பாய்

பூண்டுகளாய் தலைகுனிந்த எம்மை
புடம்போட்டு நிமிரவைத்த மன்னா - நீ
ஆண்டு நிற்கும் ஈழமதின் வலிமை
அகிலம் புகழ்து பாடும் விரைவில்

உனக்காக ஒரு கவிதை

பள்ளித் தோழிகளின் நட்பு
பத்தாம் வகுப்போடு முடிந்தது
கல்லூரித் தோழிகளின் நட்பு
கடைசியாய் எடுத்த (புகை) படத்தோடு முடிந்தது

உன்னோடு நான் கொண்ட நட்பு
எங்கே தொடங்கியது
சிந்திக்கின்றேன் என் தோழியே
கலங்காமில்லா எம் நட்பு
கல்வி அமைச்சில் தொடங்கியது

ஒருவரோடு ஒருவர்
ஒன்றாய் உண்ட நாட்கள்
ஒரு மோட்டார் சைக்கிளில்
ஊர் சுற்றிய நேரங்கள்
வெள்ளிதோறும் ஆண்டவனைக் காண
விரைந்தோடிய வேளைகள்
வேர் விட்ட என் மனதில்
இன்னும் மறக்கவில்லை

என் சோகத்தை சொல்லி
நான் அழுத சந்தர்ப்பங்கள்
உன் மன பாரத்தை நீ
பகிர்ந்த வேளைகள்
எப்படி மறந்து போகும்
அந்த நாள் நினைவுகள்
என்னை விட்டு அகலவில்லை
இன்னும் அந்தக் கனவுகள்

நாம் இரசித்த நிகழ்ச்சிகள் நான் மறக்கவில்லை
நாள் கடந்து போனாலும் அது மறையவில்லை
மழைவிழுந்த மண்ணின் மணம்
இன்னும் இங்கே மணக்கிறது
மலரும் போது பார்த்த ரோஜா மலரின் இதழ்
இன்னும் என்னைத் தொடர்கிறது

ஒரு சேரச் சென்ற சுற்றுலாக்கள்
அங்கே அள்ளி விளையாடிய முருகைக் கற்கள்
ஏறி இறங்கிய சின்னச் சீகிரிய மலை – அங்கே
பார்த்துச் சோடிகளின் செல்லச் சிரிப்பு அலை
அச்சத்தோடு ஏறிப்பார்த்த அஜந்தா ஓவியம்
அத்தனையும் நெஞ்சை விட்டு அகலவில்லை

கடல் கடந்து சென்றாய் காணாமல் போனாய்
காலங்கள் சில ஆனது கடிதத்தில் தொடர்ந்தாய்
இப்போது நான் இங்கே லண்டனில்
இப்போதோ நீ அங்கே கனடாவில்
அப்போதும் தொடர்கிறது எம் நட்பு
அதனால் மறைந்து போகாது எம் அன்பு

நீ வருவாய் என………

நேற்ற பொழுதில்
உனை கண்ட போது
இன்றைய பொழுதில் நான்
உனக்காக நீ சென்ற

உன் காலடிப்பாதங்களில்
என் பாதங்களை வைத்து
நடை பழகியவனாக
நீ வருவாய் என
காத்து நிற்கிறேன்


அன்பே!
---------


நீ எப்போது வருவாய் என்னிடம்
நான் உன்னிடம் என்
சோக துக்கங்களை சொல்லி தீர்க்க
ஏனோ நான் இவி உலகில்
யாருமில்லா அனாதையாய்!

உனைபார்த்த போதுதான்
எனக்கும் ஒருவள் இந்த
உலகில் என்று நினைத்தேன்!

அன்பே!
நீ வருவாயா உன்
அன்பை காதலை பாசத்ihத
எனக்கும் தருவாயா
உன் வருகைக்காக இவன்
உன் பாதை ஓரம்………

காதல் வைரஸ்

ஒரு சிறு பறவை,
பருந்துன்னை கொத்திப்போகும்.

விடுபட நினைப்பாய்
முடியாது!
சிறகினை விரிப்பாய்
சிறையில் தான் இருப்பாய்!

ஒரு திசையிருந்து மட்டுமே
காற்று வரும்.
தவமிருந்து பெற்றுத்தான்
சுவாசிப்பாய்.

ஒரு சோற்றுடன்
வயிறு நிறையும்.
நிறைய தாகம் எடுக்கும்.
உறக்கம் தூரம் போகும்
கலக்கம் அதிகமாகும்.

ஐந்து புலன்களுக்கும்
நரை விழும்.
ஆறாம் அறிவுக்கு
ஆயுள் குறையும்.

பல நூறு முறை
தொலைவாய்.
சில வேளைகளில்
இறந்து கூட போவாய்.

பெரு வெளியெங்கும்
ஒரு பூவே
பூத்து நிறைந்திருக்கும்.

நின்றால் நிற்பாய்
நடந்தால் நடப்பாய்
உண்டாலும் உண்ணமாட்டாய்
முறைத்தாலும் சிரிப்பாய்.

ஒரு வீட்டில்
ஒரு யன்னலில்
மட்டுமே
உன் பார்வை குவியும்

ஒரு ஊர்
ஒரு பாதை
என உன் உலகம்
சுருங்கிப்போகும்.

இருவரும் மட்டுமே
இவ்வுலகில் என
உணர்வாய்.

தரிசனம் வேண்டித் தவமிருப்பாய்.
தவற விட்டால்
தவியாய் தவிப்பாய்.

அத்தனை நரம்பும்
மொத்தமாய் வெடிக்கும்.
அணு உலை வெப்பமாய்
இரத்தம் கொதிக்கும்.

நிமிடத்திற்கு நூறு முறை வரை
இருதயம் துடிக்கும்.
சில வேளை துடிக்காமல் நிற்கும்.
அப்போது இறக்காமல் இறப்பாய்.

உன் மன வெளியில்
ஒரு முகம் மட்டுமே
தினம் உலவும்

ஒரு பொய்யாவது சொல்லும்படி
பல முறை கெஞ்சுவாய்.
சிறு புன்னகைக்கு
உன் உயிர் வரை விலை
கொடுக்க துணிவாய்.

எப்போதும் அருகிருக்க
நினைப்பாய்.
எப்போது முடியுமென
ஏங்குவாய்.

விளையாட்டுப் பிள்ளையாய்
அழுவாய்
சிரிப்பாய்
சினப்பாய்.
விடையில்லாக் கேள்விகள்
குவிப்பாய்.

ஒரே நாளில்
ஒரு யுகக் கவிஞனை
விஞ்சுவாய்.

பகல் இரவாய்
கனவு காண்பாய்.
கனவு முழுக்க
உன் உலகையே காண்பாய்.

பிழை பிழையாய்
பாட்டுப் படிப்பாய்.
அருகிருப்பவரை
உயிருடன் கொல்லுவாய்.

தொலைத்த வருடங்கள்
அதிகமாய் இருக்கும்.
சேர்த்த நிமிடங்கள்
சொற்பமாய் இருக்கும்.

ஏதோ வளைவில்
தானாய் நடப்பாய்.
பாதி வழியில் தடுமாறி நிற்பாய்.
மீதி வழி தெரியாது
தவிப்பாய்.

பாவம் நீ…

தற்கொலை

தற்கொலை என்பது
தலை விதியல்ல
அடிமுட்டாள்களின்
அதிரடி முடிவு!

வாழ்க்கை என்பது
வாழ்வதற்கே
வாழ்ந்து பார்த்துவிடவேண்டும்
வாழ்க்கையை!

எத்தனை பரீட்சைகள்
எழுதுகிறோம்
எமது
பாடசாலை வாழ்க்கையில்
இதனால் பெற்ற அறிவால்தானே
இன்று
உயர்ந்து நிற்கின்றோம்
உலகில்!

இன்பம் துன்பம்
வேதனைகள் எல்லாம்
இறைவன் வைக்கும்
பரீட்சைகள்!

தொடர்ந்து
முயற்சி செய்யும் குழந்தை
தொடுவதற்கு நெருப்பை!
தொட்டவுடன் தோல்விதான்
அது சுட்டுவிடுவதால்!

அதில் கிடைக்கும் ஞானம்
அயுள் முழுவதும்
அதனுடன் தொடர்கிறது!

தோல்விகள்தான்
துறவியாக்கி
ஞானியாக்கி விடுகிறது
மனிதனை!

வெற்றிகள் வைக்கும்
முறறுப்புள்ளி
சிந்தனைக்கு!

தோல்விகள் தொடர்ந்தும்
சிந்திக்கத் துண்டும்!

ஆசிரியர்கள்
எதற்கு உனக்கு?
அறியாததை
அறியத் தருவதற்கு!

அனுபவப்பட்டவர்களிடம் கேள்
அழகான வழிமுறைகள்
கிடைக்கும்
வாழ்வதற்கு!

தெரியும் எனும்
திமிர் தனத்தை
தீ வைத்துக்கொளுத்திவிடு!

அனைத்தும் அறிவேன் என்ற
ஆணவம் வந்த பின்பு
அடுத்தவனிடம்
அறிவுரைக் கேட்க மாட்டாய்!
அதுதான் உனக்கு
ஆபத்தாக முடிகிறது!

தன்னிடம் இல்லை
என்ற நிலையில்தான்
தற்கொலை செய்துக்கொள்கின்றாய்!
அப்படி இல்லாமல் போனது
என்ன?
அதுதான் அறிவு!
அதை
அனுபவப்பட்டவனிடம்
பெற்றுக்கொள்!

முதல் நட்பு

என்னையே நான் அறியா வயதில்
உன் நட்பு கிடைத்தது எனக்கு....!
உன் நட்பின் மூலம் தான்
என்னையே நான் கண்டேன்..!

தனிமை என்னை வாட்டிய போது
உன் நட்பில் அதை மறந்தேன்..!!
இப்போதும் யோசிக்கிறேன்
எப்போது உன்னை நான் கண்டேன்..!

எப்படி உன்னிடம் பேசினேன்..!!!
பசுமையான நினைவுகளை என்
நெஞ்சு ஆழமாக மறந்துவிட்டது...!!!!!
முதல் சந்திப்பை மறப்பது தான்
புனிதமான நட்பா....?

நட்பு காதலாகுமா?

என் கண்களில் காமம் சேரவில்லை
நெஞ்சினில் பாசம் ஊறியது
நாட்கள் கிழமைகள் ஆகின
கிழமைகள் மாதங்கள் ஆகின
மாதங்கள் வருடங்கள் ஆகின
வருடங்கள் இன்று பலவாகின்றன............

பல மணி நேரங்கள்
பாசத்தை பரிமாறினோம்
நான்கு கண்கள் மட்டும்
அன்பு என்ற வெண்மையில்
சிறிய புள்ளி கூட
வெண்மையை களங்கப்படுத்தும்
கறுப்புப் புள்ளியாக மாறவில்லை

ஏன்?
நட்புக்கு காதல் தெரியாது
ஆனால் காதலுக்குள் நட்புத்தெரியும்
காதல் என்பது வேறு
நட்பு என்பது வேறு
ஆணுடன் நட்பு வைக்கும்போது
காதல் வருவதில்லை.

ஏன்?....
பெண்ணுடன் நட்பு வைக்கும்போது மட்டும்
காதல் வருவேண்டும்?
நட்புக்கு நட்பு மட்டுமே தெரியும்
காதல் அதற்குள்
கறுப்புப் புள்ளியாக
கலந்திடுமா?..