Saturday, December 13, 2008

நூற்றாண்டு வாழியவே

இன்சுவைத் தமிழ் சொல் பூட்டீ
இனித்திடும் இசையும் கூட்டி
எம்தலைவன் உன்னைப்பாடி
எடுத்துவரக் கவிகள் கோடி

சின்னவன் உன்னைப் பாட
சிறந்த தமிழ் வார்த்தை தேட – அது
அன்னியமாய் மறைந்த ஓட
அழுகிறது உணர்வு வாட

தண்மதியாய் உதித்த - ஈழத்
தாயவளின் தலைமகனே – எம்
கண்மணியே வாழ்கவென
கசிந்துருகி வாழ்த்துகின்றோம் - உன்

எண்நிறைந்த திட்டமெலாம்
எழுச்சி கண்டு விடிந்து வரும்
நுண் அறிவின் மேதகையே
நூற்றாண்டு வாழ்வாயய்யா

ஆண்டொன்றில் திருவாய் திறப்பாய்
அவனியையே நோக்க வைப்பாய்
மீண்டு வரும் தேசமென
மிடுக்குடனே எடுத்துரைப்பாய்

பூண்டுகளாய் தலைகுனிந்த எம்மை
புடம்போட்டு நிமிரவைத்த மன்னா - நீ
ஆண்டு நிற்கும் ஈழமதின் வலிமை
அகிலம் புகழ்து பாடும் விரைவில்

உனக்காக ஒரு கவிதை

பள்ளித் தோழிகளின் நட்பு
பத்தாம் வகுப்போடு முடிந்தது
கல்லூரித் தோழிகளின் நட்பு
கடைசியாய் எடுத்த (புகை) படத்தோடு முடிந்தது

உன்னோடு நான் கொண்ட நட்பு
எங்கே தொடங்கியது
சிந்திக்கின்றேன் என் தோழியே
கலங்காமில்லா எம் நட்பு
கல்வி அமைச்சில் தொடங்கியது

ஒருவரோடு ஒருவர்
ஒன்றாய் உண்ட நாட்கள்
ஒரு மோட்டார் சைக்கிளில்
ஊர் சுற்றிய நேரங்கள்
வெள்ளிதோறும் ஆண்டவனைக் காண
விரைந்தோடிய வேளைகள்
வேர் விட்ட என் மனதில்
இன்னும் மறக்கவில்லை

என் சோகத்தை சொல்லி
நான் அழுத சந்தர்ப்பங்கள்
உன் மன பாரத்தை நீ
பகிர்ந்த வேளைகள்
எப்படி மறந்து போகும்
அந்த நாள் நினைவுகள்
என்னை விட்டு அகலவில்லை
இன்னும் அந்தக் கனவுகள்

நாம் இரசித்த நிகழ்ச்சிகள் நான் மறக்கவில்லை
நாள் கடந்து போனாலும் அது மறையவில்லை
மழைவிழுந்த மண்ணின் மணம்
இன்னும் இங்கே மணக்கிறது
மலரும் போது பார்த்த ரோஜா மலரின் இதழ்
இன்னும் என்னைத் தொடர்கிறது

ஒரு சேரச் சென்ற சுற்றுலாக்கள்
அங்கே அள்ளி விளையாடிய முருகைக் கற்கள்
ஏறி இறங்கிய சின்னச் சீகிரிய மலை – அங்கே
பார்த்துச் சோடிகளின் செல்லச் சிரிப்பு அலை
அச்சத்தோடு ஏறிப்பார்த்த அஜந்தா ஓவியம்
அத்தனையும் நெஞ்சை விட்டு அகலவில்லை

கடல் கடந்து சென்றாய் காணாமல் போனாய்
காலங்கள் சில ஆனது கடிதத்தில் தொடர்ந்தாய்
இப்போது நான் இங்கே லண்டனில்
இப்போதோ நீ அங்கே கனடாவில்
அப்போதும் தொடர்கிறது எம் நட்பு
அதனால் மறைந்து போகாது எம் அன்பு

நீ வருவாய் என………

நேற்ற பொழுதில்
உனை கண்ட போது
இன்றைய பொழுதில் நான்
உனக்காக நீ சென்ற

உன் காலடிப்பாதங்களில்
என் பாதங்களை வைத்து
நடை பழகியவனாக
நீ வருவாய் என
காத்து நிற்கிறேன்


அன்பே!
---------


நீ எப்போது வருவாய் என்னிடம்
நான் உன்னிடம் என்
சோக துக்கங்களை சொல்லி தீர்க்க
ஏனோ நான் இவி உலகில்
யாருமில்லா அனாதையாய்!

உனைபார்த்த போதுதான்
எனக்கும் ஒருவள் இந்த
உலகில் என்று நினைத்தேன்!

அன்பே!
நீ வருவாயா உன்
அன்பை காதலை பாசத்ihத
எனக்கும் தருவாயா
உன் வருகைக்காக இவன்
உன் பாதை ஓரம்………

காதல் வைரஸ்

ஒரு சிறு பறவை,
பருந்துன்னை கொத்திப்போகும்.

விடுபட நினைப்பாய்
முடியாது!
சிறகினை விரிப்பாய்
சிறையில் தான் இருப்பாய்!

ஒரு திசையிருந்து மட்டுமே
காற்று வரும்.
தவமிருந்து பெற்றுத்தான்
சுவாசிப்பாய்.

ஒரு சோற்றுடன்
வயிறு நிறையும்.
நிறைய தாகம் எடுக்கும்.
உறக்கம் தூரம் போகும்
கலக்கம் அதிகமாகும்.

ஐந்து புலன்களுக்கும்
நரை விழும்.
ஆறாம் அறிவுக்கு
ஆயுள் குறையும்.

பல நூறு முறை
தொலைவாய்.
சில வேளைகளில்
இறந்து கூட போவாய்.

பெரு வெளியெங்கும்
ஒரு பூவே
பூத்து நிறைந்திருக்கும்.

நின்றால் நிற்பாய்
நடந்தால் நடப்பாய்
உண்டாலும் உண்ணமாட்டாய்
முறைத்தாலும் சிரிப்பாய்.

ஒரு வீட்டில்
ஒரு யன்னலில்
மட்டுமே
உன் பார்வை குவியும்

ஒரு ஊர்
ஒரு பாதை
என உன் உலகம்
சுருங்கிப்போகும்.

இருவரும் மட்டுமே
இவ்வுலகில் என
உணர்வாய்.

தரிசனம் வேண்டித் தவமிருப்பாய்.
தவற விட்டால்
தவியாய் தவிப்பாய்.

அத்தனை நரம்பும்
மொத்தமாய் வெடிக்கும்.
அணு உலை வெப்பமாய்
இரத்தம் கொதிக்கும்.

நிமிடத்திற்கு நூறு முறை வரை
இருதயம் துடிக்கும்.
சில வேளை துடிக்காமல் நிற்கும்.
அப்போது இறக்காமல் இறப்பாய்.

உன் மன வெளியில்
ஒரு முகம் மட்டுமே
தினம் உலவும்

ஒரு பொய்யாவது சொல்லும்படி
பல முறை கெஞ்சுவாய்.
சிறு புன்னகைக்கு
உன் உயிர் வரை விலை
கொடுக்க துணிவாய்.

எப்போதும் அருகிருக்க
நினைப்பாய்.
எப்போது முடியுமென
ஏங்குவாய்.

விளையாட்டுப் பிள்ளையாய்
அழுவாய்
சிரிப்பாய்
சினப்பாய்.
விடையில்லாக் கேள்விகள்
குவிப்பாய்.

ஒரே நாளில்
ஒரு யுகக் கவிஞனை
விஞ்சுவாய்.

பகல் இரவாய்
கனவு காண்பாய்.
கனவு முழுக்க
உன் உலகையே காண்பாய்.

பிழை பிழையாய்
பாட்டுப் படிப்பாய்.
அருகிருப்பவரை
உயிருடன் கொல்லுவாய்.

தொலைத்த வருடங்கள்
அதிகமாய் இருக்கும்.
சேர்த்த நிமிடங்கள்
சொற்பமாய் இருக்கும்.

ஏதோ வளைவில்
தானாய் நடப்பாய்.
பாதி வழியில் தடுமாறி நிற்பாய்.
மீதி வழி தெரியாது
தவிப்பாய்.

பாவம் நீ…

தற்கொலை

தற்கொலை என்பது
தலை விதியல்ல
அடிமுட்டாள்களின்
அதிரடி முடிவு!

வாழ்க்கை என்பது
வாழ்வதற்கே
வாழ்ந்து பார்த்துவிடவேண்டும்
வாழ்க்கையை!

எத்தனை பரீட்சைகள்
எழுதுகிறோம்
எமது
பாடசாலை வாழ்க்கையில்
இதனால் பெற்ற அறிவால்தானே
இன்று
உயர்ந்து நிற்கின்றோம்
உலகில்!

இன்பம் துன்பம்
வேதனைகள் எல்லாம்
இறைவன் வைக்கும்
பரீட்சைகள்!

தொடர்ந்து
முயற்சி செய்யும் குழந்தை
தொடுவதற்கு நெருப்பை!
தொட்டவுடன் தோல்விதான்
அது சுட்டுவிடுவதால்!

அதில் கிடைக்கும் ஞானம்
அயுள் முழுவதும்
அதனுடன் தொடர்கிறது!

தோல்விகள்தான்
துறவியாக்கி
ஞானியாக்கி விடுகிறது
மனிதனை!

வெற்றிகள் வைக்கும்
முறறுப்புள்ளி
சிந்தனைக்கு!

தோல்விகள் தொடர்ந்தும்
சிந்திக்கத் துண்டும்!

ஆசிரியர்கள்
எதற்கு உனக்கு?
அறியாததை
அறியத் தருவதற்கு!

அனுபவப்பட்டவர்களிடம் கேள்
அழகான வழிமுறைகள்
கிடைக்கும்
வாழ்வதற்கு!

தெரியும் எனும்
திமிர் தனத்தை
தீ வைத்துக்கொளுத்திவிடு!

அனைத்தும் அறிவேன் என்ற
ஆணவம் வந்த பின்பு
அடுத்தவனிடம்
அறிவுரைக் கேட்க மாட்டாய்!
அதுதான் உனக்கு
ஆபத்தாக முடிகிறது!

தன்னிடம் இல்லை
என்ற நிலையில்தான்
தற்கொலை செய்துக்கொள்கின்றாய்!
அப்படி இல்லாமல் போனது
என்ன?
அதுதான் அறிவு!
அதை
அனுபவப்பட்டவனிடம்
பெற்றுக்கொள்!

முதல் நட்பு

என்னையே நான் அறியா வயதில்
உன் நட்பு கிடைத்தது எனக்கு....!
உன் நட்பின் மூலம் தான்
என்னையே நான் கண்டேன்..!

தனிமை என்னை வாட்டிய போது
உன் நட்பில் அதை மறந்தேன்..!!
இப்போதும் யோசிக்கிறேன்
எப்போது உன்னை நான் கண்டேன்..!

எப்படி உன்னிடம் பேசினேன்..!!!
பசுமையான நினைவுகளை என்
நெஞ்சு ஆழமாக மறந்துவிட்டது...!!!!!
முதல் சந்திப்பை மறப்பது தான்
புனிதமான நட்பா....?

நட்பு காதலாகுமா?

என் கண்களில் காமம் சேரவில்லை
நெஞ்சினில் பாசம் ஊறியது
நாட்கள் கிழமைகள் ஆகின
கிழமைகள் மாதங்கள் ஆகின
மாதங்கள் வருடங்கள் ஆகின
வருடங்கள் இன்று பலவாகின்றன............

பல மணி நேரங்கள்
பாசத்தை பரிமாறினோம்
நான்கு கண்கள் மட்டும்
அன்பு என்ற வெண்மையில்
சிறிய புள்ளி கூட
வெண்மையை களங்கப்படுத்தும்
கறுப்புப் புள்ளியாக மாறவில்லை

ஏன்?
நட்புக்கு காதல் தெரியாது
ஆனால் காதலுக்குள் நட்புத்தெரியும்
காதல் என்பது வேறு
நட்பு என்பது வேறு
ஆணுடன் நட்பு வைக்கும்போது
காதல் வருவதில்லை.

ஏன்?....
பெண்ணுடன் நட்பு வைக்கும்போது மட்டும்
காதல் வருவேண்டும்?
நட்புக்கு நட்பு மட்டுமே தெரியும்
காதல் அதற்குள்
கறுப்புப் புள்ளியாக
கலந்திடுமா?..

நட்பு

இதயமெனும் பூந்தோட்டத்தில்-அழகிய
மலராக மலர்ந்துள்ள நம் நட்பு
நாம் கொண்ட பாசம்- நெடுங்காலசொந்தம்
நட்புகள் தடம் மாறதவை

செல்ல செல்ல கோபம் வரும்- நட்புக்குள்ளே
அள்ள அள்ள குறைவதில்லை
நட்பு மட்டுமே.-நட்பு எனும்
தீவினில் வாழ்கிறோம் நாம் வாழ்கிறோம்

இறைவனும் நமக்குள்ளே வழங்கிய
பரிசு இது.பூமி சுற்றும் வரை நாமும்
சேர்ந்து வாழத்தான் வேண்டும்.
அதை நீக்கு,இன்னொரு ஜென்மமும்
நட்புடன் வாழ்வோம்.

காண்போம் சமரசம்

கொல்லாமல் கொல்லும்
கண்ணே
தாழம்பூ நாகமடி நீ
உன் மெய்யான அன்பெங்கே
பொய்யாகிப் போனதெப்போ
விஞ்ஞான உலகென்பதால்
விலை பேசி வித்தாயோ

மணல் வீடு கட்டவில்லை
மழை கண்டு அஞ்சுதற்கு
மாளிகை கட்டவில்லை
புயல் மையம் கண்டு துடிப்பதற்கு
ஆராதனைக்குரியவளே

நீயும் நானும்
இணைந்து கட்டியது தானே
இந்தக் காதல் கோட்டை
ஏன் தகர்த்தாய்
இது ராஜமாளிகை அல்ல
மீண்டும் கட்டுதற்கு

துடிக்குதடி நெஞ்சம்
தகர்த்தது நீ என்பதால்
என் செய்வேன் உன்னை
நீ வாழும் நெஞ்சத்தை கொல்கிறேன்
கோடுபோட்டு வாழ கூசுதடி நெஞ்சம்

கூடிவாழ்ந்த காலம் போதுமடி கிளியே
கூடு விட்டு ஆவி போனால்
கூடும் இடத்தில் காண்போம் சமரசம்

இறைவனே பார்த்துக் கொள்ளட்டும்

யாரையுமே குறைத்து மதிப்பிடாதவள்- நான்
அந்த வேகம் தான் உன்னை காதலிக்க வைத்தது
யாரையுமே ஏமாற்ற விரும்பாதவள்- நான்
அந்த நிலை தான் உண்மை சொல்ல வைத்தது
உன்னில் உயிராய் இருந்தவள்- நான்
அது தான் உறவுகளை விட்டு கொடுக்க வைத்தது
நீ தான் எதிர்காலம்; என்றிருந்தவள்- நான்
ஆனால் நீ ?
நீ தான் கடைசியும் முதலுமென்றாய்
உயிர் என்றாய்
உனை பிரிந்தால் பித்து பிடிக்குமென்றாய்
திருமணம் என்றதும்
இன்னொரு பெண் உன் வலையில் சிக்க இருப்பதைய்
புரிந்து கொண்டு எதையுமே மறைக்காத என்னை
ஏமாற்றி விட்டாய் என்றாய்
உன் நடத்தை சரியில்லை என்றாய்
ஆசை வைத்து தான் பழகினேன் என்றாய்

உன்னை பற்றி உனக்கே தெரியவில்லை
என்னை பற்றி எப்படி தெரிந்திருப்பாய் ?
உன்னிடத்தில் என்ன தான் இருக்கிறது
பணமா? பொருளா ? படிப்பா ? ஏது எனக்கு புரியவில்லை?
எதையுமே மறைக்காத ஒருத்தி உன் அகராதியில் ஏமாற்றியவள்
உன் தேவை தீரும் வரை தீயவர்கள் நல்லவர்கள் என்றாய்
உன் தேவை தீர்ந்த பின் நல்லவர்களயும் தீயவர்களுடன் இனைப்பாய்
திருமணத்துக்கு மட்டும் கேட்காவிட்டால் ????
முடிந்த வரை என்னை வைத்தே உன் தேவைகளை தீர்திருப்பாய்
என்னை சேர்ந்தவர்களை இன்று புறங்குறும் நீ
அன்றே புரிந்துகொண்டாய் எனில்
எதுக்காய் அவர்கள் உதவியை ஏற்றாய் ?
அது எனக்கு புரியவில்லை?
உன் பகையை தீர்பதற்கு என்னை பகடைகாயாகியிருக்கலாம்
ஆனால் உடைந்தது என் மனது
ஆசை வைப்பது காதல் அல்ல
அன்பு வைப்பது தான் காதல்
இறுதியாக ஒன்று மட்டும் சொல்கிறேன்
எந்த தேவாலயத்தில் உன் நலனுக்காக வேண்டினேனோ
அதே தேவாலயத்தில் உள்ள இறைவன் மீது சத்தியம்
செய்கிறேன். உன்னைப் போன்றோரையும் இருவர் காதலிப்பது
தெரிந்தும் இடையில் நுழைவோரையும் அவரே பார்த்து
கொள்ளட்டும்.

பூக்குமா வசந்தம்…

கண்கள் உனைக்கண்ட நாள் முதலாய்
காத்திருந்தேன் உன் நட்புக்காக
எத்தனை இரவுகள் ஏக்கமாய் கழிந்தன
தெரியுமா உனக்கு

உன்னோடு ஒருவனைப் பார்த்தால்
உள்ளம் ஊமையாய் அழுதது
நட்பினாலா காதலினாலா
விடை தெரியா வினாக்கள்
என்னுள் விளையாடி ஒய்ந்தன

என்னுள்ளத்தை எனக்கு வெளிச்சமிட்டது
உந்தன் வெட்கம் தானடி
நான் தீர்மானித்து விட்டேன்
என்னுள் இருப்பது நட்பல்லவடி
அது நிச்சயமாய் காதல் தான்

உன்னிடம் என் காதலைச் சொல்ல
ஓராயிரம் தடவை முயன்று விட்டேன்
விளைவு விபரீதம் ஆகி
உன் நட்பும் என்னை பகைத்து விட்டால்
முயற்சி எனக்குள்ளேயே முடங்கிக் கொண்டது

யாரும் அறியாமல்
ஒப்புக்கொள்கின்றேன் நான் கோழைதான்
ஏங்கித் தவிக்கின்றேன் என்றாவது ஒருநாள்
என் எண்ணம் உன்னை எட்டும்
அன்றுதானடி நான் பிறந்த பயனை அடைந்த நாள்
காத்திருக்கின்றேன் அந்த நாளுக்காக
பூக்குமா என் வாழ்விலும் வசந்தம்

சாவே வாழ்வாக....

விடியல் பிறக்குமென்று
நான் தினமும் விழிக்கின்றேன்
தவறாமல் விடிகிறது விடியல்
வெறும் பொழுதுகளாய் மட்டுமே
விடியாமலேயே இருக்கிறது வாழ்வு
நான் ஜனித்த தேசத்தில்

ஊர் பெயர் தாங்கிய சாலைகளில்
போவது எங்கென்று தெரியாமல்
அங்கும் இங்கும் அலைகின்றோம்
முகவரி தொலைத்த பயணியைப்போல
சொந்த நாட்டின் நாடோடிகளாய் .........

காடுகள்தான் எங்கள் மறைவிடம்
மரநிழல்தான் எங்கள் வீடுகள்
கொல்லும் குண்டுகள் மழைப்பொழிவு
வெடி ஒசைகள்தான் எம் தாலாட்டாய்
தினம் மரணத்தை வென்று மீள்கிறோம்.......

ஈதல் இசைபட வாழ்தல் என்பதாம்
தமிழனின் சிறப்பு பண்பாடு
சாதல், அதனிலும் வாழ்வைத் தேடல்
ஈழத் தமிழனின் சாபக்கேடாய் இன்று
சாகாமல் தினம் செத்து வாழ்கிறோம் .......

ஆறடி நிலம்கூட சொந்தமின்றி
அழுகிய பிணங்களாய் அடக்கமாகிறோம்
கதறி அழவும் நேரமின்றி - நெஞ்சில்
சோகம் சுமந்து வாழ்கிறோம்
ஆறுதல் கூற யார் வருவாரோ?

தூக்கம் மறந்த நாட்கள் மறந்து
விழிகள் மூடி உறங்க மறுக்கிறது
மூடிய விழிகள் திறக்க மறுத்தால்
மரணம் வென்றதாய் அர்த்தம் கொள்ளும்
வேதனை கதைதான் எங்கள் வாழ்வு...........



இரவெல்லாம்
விடியாம்ல்
நீண்டுகொண்டே
இருக்கிறது…!.

நாளை உன்னை
பார்க்க துடிக்கும்
என் மனதின் வேதனை
அறியாமல்!.

விடிகின்ற பொலுதில் ஆவது
உன் விருப்பத்தை
சொல்லி விடு..
விருப்பம் இல்;லை எனில்
என்னை இங்கு கொண்ருவிடு!.

நாளை பற்றிய
கனவுகள் எல்லாம்
கருகிப்போகட்டும்!.

மிண்டும் நான்
புதிதாய் பிறப்பேன்
உனக்கு பிடித்தவனாய்!.

அப்போதாவது என்னை
அணைத்து கொள்
இந்த பிறப்பின்
கனவுகள் நிறைவேறட்டும்!.

நான் காண்ட கனவுக்குள்
நீ வாழ வேண்டும்
என்னையே வழிநாடத்தும் - என்
தாயாக வேண்டும்!.

Monday, December 8, 2008

தினந்தோறும் கண்களில்

தினந்தோறும் கண்களில் கனவு சுமந்து இதயத்தில் உன்னை வைத்து கொண்டு வாழ்க்கை என்னும் நரகத்தில் தினம் தினம் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். அன்பே உன்னை மறக்க வேண்டும் என்றுதான் தினமும் நின்னைக்கின்றேன். ஆனால் உன் பார்வைகள் என் மேல் விழூந்த அந்த நாளை உனக்காய் நான் கவிதை எழுதிய அந்த நாட்களை உனக்காக ஒவ்வோர் நிமிடமும் இதயம் அனலாய் கொதிக்க காத்திருந்த அந்த இனிய நாட்களையும் கடைசியில் உன்னை மறக்க சொன்ன அந்த நாளையும் சேர்த்து மறக்கத்தான் நினைக்கிறேன் ஆனால் என்னால் மறக்க முடியவில்லையே..

என்னை காதலிக்கிறேன்

என்னை காதலிக்கிறேன்
என்று சொன்னியே
நான் நம்பிதான்
என் மனதை ஒப்படைத்தேன்
ஏமாற்ற்றி விட்டியே

கடல் கடந்துவந்து
அந்நிய தேசத்தில்
பைத்தியமாய் நான்.

பெண்ணே காதலை
கரும்பலகையில் எழுதாதே
அழிந்துவிடும்
இதயத்தில் கல்வெட்டாக பொறி
என்றும் நிலைத்திருக்கும்

காய்ந்து போன
இந்த பூமியில்
எனக்கு கிடைத்த
ஒரே தாகம்
உன் நினைவுகள் தான்

நீயும் காதலி

நீயும் காதலி nalama???????????????
இனியவளே!
கற்பனையில்
ஒருவனை
காதலித்துப் பார்...!
கால் கடுக்க
காதலனை
பார்க்க
கண்ட இடத்தில் நிற்ப்பாய்;
நெற்றி பொட்டை
நேரா நேரம்
புதியதாக மாற்றுவாய்;
அவன்
விழி இரண்டும்
உனை விழிக்கிறதா?
என்று விழித்து பார்ப்பாய்;
காதலை
சொல்ல
வழி தெரியாமல்
வீட்டு
வழி மறப்பாய்;
தனிமையில்
காதல் ஆட்சி
செய்வதை
இனிமையாக யோசிப்பாய்;
சொல்ல வந்த
வார்த்தையெல்லாம்
மெல்ல மெல்ல
மௌனமாக விழுங்குவாய்;
அவனிடம்
பேசும் போது மட்டும்
வார்த்தை மறப்பாய்;
இப்பொழுது யோசித்துப்பார்...?
உன்னிடம்
காதலை
சொல்ல முடியாமல்
காதலால்
நான் படும்
அவஸ்தைகளை....!
நீங்கள் இல்லாத என்
மனம் மீண்டும் பசுமைகளை
தேடிப்போகும் இனிமையான
அந்த நாட்களை எண்ணி

வாழ்க்கையில் பெரிய
ஆச்சர்யம் அன்பு
நிறைந்தவர்களை எப்போதாவது
எங்காவது சந்திக்க நேரிடும்

அதுபோல்

நம் சந்திப்பும் நிகழும்
என வேண்டிக் கொள்ளுங்கள்
நம்பிக்கையோடு நாட்களை
நகர்த்துங்கள்
காற்றாவது சுமந்து
வரும் என் முகவரியை.
என்றும் பசுமையான நினைவுகளுடன்

நட்புக்காக,,,,,,,,,,,

நன்றிகடனென கிடக்கும் நட்பில்,
நன்றி சொல்லி பிரியும் சிலர்..

அணை பொங்கி வழியும்
ஆறுபோல கண்கள்,

ஆறாமல் கிடக்கும் மனம்
ஆதிக்க வார்த்தைகளில்..

காலம் கனியும் கண்ணீர் விலகும்
கனல் ஏரியும் கன்னிநட்பரிவர்..


வெள்ளையன் வேட்டையில்
வேர்கண்ட கோட்டைபோல்,

சிதறிய சிநேகத்திலும்
சிதறாத முத்தே நட்பே,

பகிர்ந்ததை பகிர
முடியாமல் பரிதவிப்பது

நட்பிலக்கனமோ இல்லை
நப்பிலக்கனமோ..!

ஆண் பெண் நட்பு....

சாதியில்லை மதமில்லை
காதலுக்கு மட்டும் சொல்லவில்லை

காதலில்லை கர்வமில்லை
கண்களிலோ காமமில்லை,

காசில்லை பணமில்லை
அழகொன்றும் தேவையில்லை,

தொட்டதில்லை கை பட்டதில்லை
சோகத்தில் மடி சாய்ந்தலும்,

தோழனே அதில் ஒன்றும்
தவறே இல்லை,

விழியிலே நதியில்லை
மனதிலே சுமையில்லை

பிரிவொன்று நேர்ந்தாலும்
நம் நட்பு என்றும் அழிவதில்லை.

நான் ஒரு ஏழை

ஊர் இல்லை
உறவு இல்லை
உண்ண உணவில்லை
படுத்துறங்க இடமும் இல்லை
உடுத்த ஆடையுடன் ஓட ஓட
திரிகின்றேன் நான் ஒரு ஏதிலி
தெருத்தெருவாய் அலைந்தேன்
என் தேசம் எல்லாம் திரிந்தேன்
தெருவில் உள்ள மரமும்
குளக்கரையும் உறவாகியது எனக்கு!
என் ஊரில்
என் இல்லத்து முற்றத்தில்
ஓடி விளையாடிய என்
குஞ்சுகள் எங்கே
பத்து மாதம் சுமந்தேன்
பெற்றெடுத்த நாளில் இருந்து
பல கனவோடு வளர்ந்தேன்
நான் ஒரு ஏழை.
கயவன் அவன் கண் என் முன்
பிள்ளையைக் கொன்று அழித்தானே
எனக்கேன் இந்த அவலம்?
நாமும் எம் வாகனத்தில் விரைவில்
பறவைகள் போல் வட்டமிடுவோம்
வாணவேடிக்கையும் பூமியில் நிகழ்த்தி
புலர்காலைப் பொழுத்தில்
புன்னகையுடன் எழுந்து
புது ஈழம் வென்றெடுக்க
ஒன்றாய் எழுவோம்

மாற்றான் தோட்டத்து...!

மாற்றான் தோட்டத்து...! மல்லிகை அல்ல!

சிற் எறும்பும் கறையானும்
இடம் மாறிக் கொள்கின்றன
மழை வரும் என்பதை - முன்கூட்டியே
தெரிந்துகொண்டதால்!

குளம் வற்றிப் போனதால்
நாரைகள் இடம் மாறிக்கொள்கின்றன
தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள!

மின்மினிப் பூச்சிகளால்
ஒளியேற்றுக் கொள்கின்றன
தூங்கனாங் குருவிகள்
தமது இருப்பை உறுதிப்படுத்த!

உன்னால் மட்டுமே...!
ஏன் நண்பா...?...?
உனது இருப்பை
உறுதிப்படுத்த முடியவில்லை...!

காக்கையின் கூட்டிக்குள்
குயிலாகவும்
கறையான் புற்றுக்குள்...?
கருநாகமாகவும்!
மாமரம் மீது
குருவிச்சையாகவும்
ஒட்டுண்ணி வாழ்க்கை
வேண்டாம் உனக்கு!

சுயமாய் முடிவெடு
சுடுகலன் ஏந்தி
போர்தொடு
எமது நாடு
எமக்கே சொந்தம்!

பகை வந்து
பறிபோக - இது
மாற்றான் தோட்டத்து
மல்லிகை அல்ல

வாழி

அன்னையர் செல்வமே வாழி!
தமிழன் முகவரியே வாழி
தானைத் தலைவனே வாழி
குழந்தை மனமே நெஞ்சில்
வளர்த்த வேங்கையே வாழி

மழலைச் சிரிப்பை உதிர்க்கும்
மக்களின் உயிரே வாழி
தம்பி தங்கையர் நெஞ்சில்
தங்கிடும் அண்ணனே வாழி

தாயக உறவுகள் வாழ்த்தும்
தலைவரே நலமாய் வாழி
எண்ணமும் செயலும் எங்கள்
இன்புறு வாழ்வாய் கொண்ட
திண்ணிய கொள்கை தாங்கிய
தேசிய தலைவா வாழி

ஈழத்து அன்னையர் குழந்தையாய்
ஏற்றிடும் செல்வமே வாழி
மழலைகள் தோள்களில் சுமக்கும்
மாண்புடை நெஞ்சனே வாழி

படித்தவர் பாமரர் யார்க்கும்
பாதை காட்டுவோய் வாழி
ஏழைகள் செல்வர்கள் பேதம்
ஏற்காத வேந்தனே வாழி

சாதிகள் சமயங்கள் வேற்றுமை
சாய்த்திட்ட தேவனே வாழி
சூரியப் புதல்வா வாழி
ஈழத்துச் சிற்பியே வாழி

போர்க்கலை நுண்கலை ஒன்றாய்
போற்றிடும் குருவே வாழி
கலையும் பண்பாடும் தமிழர்
கண்ணாய் காப்பவன் வாழி

விஞ்ஞானம் தொழில் நுட்பம் கணனி
வித்தைகள் வளர்ப்போன் வாழி
ஒழுக்கமும் சீலமும் தவறா
உத்தமம் விரும்புவோய் வாழி
என்றென்றும் போற்றிடும் வண்ணம்
எங்களின் தலைவனே வாழி வாழி!

இருவரிக்கவிதை

பிரம்மன்
கவி எழுத முயன்ற போது
தவறி வடித்த
ஓவியச்சிற்பம்
உன் இதழ்கள்!

உன் அழகை
எட்டிப்பார்த்தால்
கவிதை!
உள் சென்று பார்த்தால்
காதல்!

உன்னை ரசிக்கும்
"ஆயிரத்தில்" ஒருவனாக
நான்!
உன்னை மட்டுமே ரசிக்கும்
"ஒருவனில்" ஒருவனாகவும்
நான்!!

எனக்கு சொந்தமான
உன் மேலுதட்டை
முத்தமிடாமல் இருக்கச்சொல்
உன் கீழுதட்டை !!

நான்
கடைசியாக படித்த
இருவரிக்கவிதை
உன் இதழ்கள் தான்!


உன்னை இதழ் பார்த்து
வெட்கி சிவந்த
பூக்கள்
இன்னும்
சிவப்பு ரோஜாக்களாகவே
பூக்கின்றன!