Saturday, December 13, 2008

காண்போம் சமரசம்

கொல்லாமல் கொல்லும்
கண்ணே
தாழம்பூ நாகமடி நீ
உன் மெய்யான அன்பெங்கே
பொய்யாகிப் போனதெப்போ
விஞ்ஞான உலகென்பதால்
விலை பேசி வித்தாயோ

மணல் வீடு கட்டவில்லை
மழை கண்டு அஞ்சுதற்கு
மாளிகை கட்டவில்லை
புயல் மையம் கண்டு துடிப்பதற்கு
ஆராதனைக்குரியவளே

நீயும் நானும்
இணைந்து கட்டியது தானே
இந்தக் காதல் கோட்டை
ஏன் தகர்த்தாய்
இது ராஜமாளிகை அல்ல
மீண்டும் கட்டுதற்கு

துடிக்குதடி நெஞ்சம்
தகர்த்தது நீ என்பதால்
என் செய்வேன் உன்னை
நீ வாழும் நெஞ்சத்தை கொல்கிறேன்
கோடுபோட்டு வாழ கூசுதடி நெஞ்சம்

கூடிவாழ்ந்த காலம் போதுமடி கிளியே
கூடு விட்டு ஆவி போனால்
கூடும் இடத்தில் காண்போம் சமரசம்

No comments: