Saturday, December 13, 2008

உனக்காக ஒரு கவிதை

பள்ளித் தோழிகளின் நட்பு
பத்தாம் வகுப்போடு முடிந்தது
கல்லூரித் தோழிகளின் நட்பு
கடைசியாய் எடுத்த (புகை) படத்தோடு முடிந்தது

உன்னோடு நான் கொண்ட நட்பு
எங்கே தொடங்கியது
சிந்திக்கின்றேன் என் தோழியே
கலங்காமில்லா எம் நட்பு
கல்வி அமைச்சில் தொடங்கியது

ஒருவரோடு ஒருவர்
ஒன்றாய் உண்ட நாட்கள்
ஒரு மோட்டார் சைக்கிளில்
ஊர் சுற்றிய நேரங்கள்
வெள்ளிதோறும் ஆண்டவனைக் காண
விரைந்தோடிய வேளைகள்
வேர் விட்ட என் மனதில்
இன்னும் மறக்கவில்லை

என் சோகத்தை சொல்லி
நான் அழுத சந்தர்ப்பங்கள்
உன் மன பாரத்தை நீ
பகிர்ந்த வேளைகள்
எப்படி மறந்து போகும்
அந்த நாள் நினைவுகள்
என்னை விட்டு அகலவில்லை
இன்னும் அந்தக் கனவுகள்

நாம் இரசித்த நிகழ்ச்சிகள் நான் மறக்கவில்லை
நாள் கடந்து போனாலும் அது மறையவில்லை
மழைவிழுந்த மண்ணின் மணம்
இன்னும் இங்கே மணக்கிறது
மலரும் போது பார்த்த ரோஜா மலரின் இதழ்
இன்னும் என்னைத் தொடர்கிறது

ஒரு சேரச் சென்ற சுற்றுலாக்கள்
அங்கே அள்ளி விளையாடிய முருகைக் கற்கள்
ஏறி இறங்கிய சின்னச் சீகிரிய மலை – அங்கே
பார்த்துச் சோடிகளின் செல்லச் சிரிப்பு அலை
அச்சத்தோடு ஏறிப்பார்த்த அஜந்தா ஓவியம்
அத்தனையும் நெஞ்சை விட்டு அகலவில்லை

கடல் கடந்து சென்றாய் காணாமல் போனாய்
காலங்கள் சில ஆனது கடிதத்தில் தொடர்ந்தாய்
இப்போது நான் இங்கே லண்டனில்
இப்போதோ நீ அங்கே கனடாவில்
அப்போதும் தொடர்கிறது எம் நட்பு
அதனால் மறைந்து போகாது எம் அன்பு

1 comment:

piratha said...

உங்கள் இணையதளம் எனக்குப் பிடித்திருக்கிறது, இதற்கு நான் உங்களுக்கு மொபைல் ஆப் செய்து தருகின்றேன் என்னை அழைக்கவும் +94764017780 https://ealuvi.blogspot.com/