Saturday, December 13, 2008

தற்கொலை

தற்கொலை என்பது
தலை விதியல்ல
அடிமுட்டாள்களின்
அதிரடி முடிவு!

வாழ்க்கை என்பது
வாழ்வதற்கே
வாழ்ந்து பார்த்துவிடவேண்டும்
வாழ்க்கையை!

எத்தனை பரீட்சைகள்
எழுதுகிறோம்
எமது
பாடசாலை வாழ்க்கையில்
இதனால் பெற்ற அறிவால்தானே
இன்று
உயர்ந்து நிற்கின்றோம்
உலகில்!

இன்பம் துன்பம்
வேதனைகள் எல்லாம்
இறைவன் வைக்கும்
பரீட்சைகள்!

தொடர்ந்து
முயற்சி செய்யும் குழந்தை
தொடுவதற்கு நெருப்பை!
தொட்டவுடன் தோல்விதான்
அது சுட்டுவிடுவதால்!

அதில் கிடைக்கும் ஞானம்
அயுள் முழுவதும்
அதனுடன் தொடர்கிறது!

தோல்விகள்தான்
துறவியாக்கி
ஞானியாக்கி விடுகிறது
மனிதனை!

வெற்றிகள் வைக்கும்
முறறுப்புள்ளி
சிந்தனைக்கு!

தோல்விகள் தொடர்ந்தும்
சிந்திக்கத் துண்டும்!

ஆசிரியர்கள்
எதற்கு உனக்கு?
அறியாததை
அறியத் தருவதற்கு!

அனுபவப்பட்டவர்களிடம் கேள்
அழகான வழிமுறைகள்
கிடைக்கும்
வாழ்வதற்கு!

தெரியும் எனும்
திமிர் தனத்தை
தீ வைத்துக்கொளுத்திவிடு!

அனைத்தும் அறிவேன் என்ற
ஆணவம் வந்த பின்பு
அடுத்தவனிடம்
அறிவுரைக் கேட்க மாட்டாய்!
அதுதான் உனக்கு
ஆபத்தாக முடிகிறது!

தன்னிடம் இல்லை
என்ற நிலையில்தான்
தற்கொலை செய்துக்கொள்கின்றாய்!
அப்படி இல்லாமல் போனது
என்ன?
அதுதான் அறிவு!
அதை
அனுபவப்பட்டவனிடம்
பெற்றுக்கொள்!

No comments: